நேற்று அதிகாலை வெயாங்கொட அல்கம்பிட்டி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி பற்றிய அதிர்ச்சி தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய ஒருவரின் கை, காலை வெட்டி துண்டாடியதுடன், துண்டாடிய காலை எடுத்து சென்றுள்ளா்.
துப்பாக்கிச் சூட்டில் ரௌடியான யோதபெலியைச் சேர்ந்த 37 வயது நிஷாந்த குமாரசிரி என்பவரே உயிரிழந்தார்.
வெயங்கொட பகுதியில் கடந்த 19ஆம் திகதி காலை, 3 பிள்ளைகளின் தந்தையை, போதைப்பொருள் கடத்தல் பற்றி பொலிசாருக்கு தகவல் வழங்கியமைக்காக, சந்தேகநபர் அவரது கை, காலை வெட்டி துண்டாடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 90 நாள் தடுப்பு உத்தரவின் பேரில் பெலியகோடா குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் காண்பிப்பதற்காக நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதன்போது வெயங்கொட அல்கம்பிட்டி பகுதியில் ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கி, தப்பிக்க முயன்றபோது சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்தேக நபர் வெயங்கொட பகுதியில் ஒரு முன்னணி கசிப்பு தொழிலதிபர் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கடத்தல்காரன் என பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபர் மீது நீதிமன்றத்தில் ஐந்து கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்கள் நிலுவையில் உள்ளன.