T24 Tamil Media
இலங்கை

உடல்களை தகனம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்வதைத் தொடருமாறு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் டொலவத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர்கள் இறுதி முடிவு எடுக்கும் வரை தகனமுறை தொடரப்படவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கொரோனா முதல் அலையின் போது சுகாதார அதிகாரிகள் வகுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனாவினால் மரணமானவர்கள் தகனம் செய்யப்பட்டனர்.

எனினும் இரண்டாவது அலையின் பின்னர் இலங்கை தௌஹீட் ஜமாத் அமைப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியிட்ட அறிக்கையின் பின்னரே இது தொடர்பான பிரச்சனை உருவானது என்று பிரேம்நாத் டொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனவினால் மரணமடந்தவர்களின் சடலங்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருப்பது மருத்துவ கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாகும்.

கொரோனவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்யும் செயற்பாடு ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தைத் தாக்கும் நோக்கம் கொண்டது அல்ல. அத்துடன் எல்லா சட்டங்களும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் பிரேம்நாத் டொலவத்த தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more