மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு ஆரம்பமான அடை மழை இன்று காலை வரை தொடர்ந்ததால் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய மஞ்சந்தொடுவாய் , காங்கேசயனோடை , பாலமுனை போன்ற ஊர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான மழையால் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் , வீதிகளிலும் புகுந்து வழிந்தோட முடியாமல் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அசெளகரியத்துக்கு உள்ளாகி உள்ளனர்.