சபாநாயகரின் வாகனத்துக்கு முன்னால் பயணிக்கும் வாகனத் தொடரணியில் , பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு, கொரோனா தொற்று உறுதியான நிலையில் தன்னை சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுய தனிமைப்படுத்தலின் கீழ் இருக்க சுகாதாரத் துறை அறிவிக்காத போதும், சபாநாயகர் தாமாக சுய தனிமைப்படுத்தலின் கீழ் இருந்து வருகின்றார்.
எந்தவொரு ஆலோசனையை சுகாதாரத்துறை வழங்கி இருந்தாலும் அதனை பின்பற்றி மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தாம் தயார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.