மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் பிரிவிலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று(புதன்கிழமை) கூலிவேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாகவும் அவர் பயணித்த, துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பழுகாமம் 2ஆம் பிரிவு வன்னிநகரைச் சேர்ந்த 52 வயதுடைய வல்லிபுரம் ஞானசேகரம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காணாமல் போயுள்ளவரின் துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குளத்தில் தேடும் நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்