தமிழீழம் இனி சாத்தியமில்லை; வடக்கிலேயே அதிக காலம் போராடினேன்; அதனால் வடக்கிலும் சேவை செய்ய களமிறங்குகிறேன்
தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.