கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து செய்திகளை வெளியிடும் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டிகள் சிலவற்றினை ஸ்ரீலங்கா அரச சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கோரோனோ வைரஸ் தொடர்பாக ஊடகங்கள் / சமூக வலைத்தள தொடர்ச்சியாக விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் நிலையில் தேர்களில் மேலும் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய காலத்திற்கு தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் எனது தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத் திணைக்களம் , கீழ்காணும் விடயங்களை அறிவுறித்தியுள்ளது.
- சரிபார்க்கப்பட்ட மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே பகிர்தல் .
- பாதிக்கப்பட்ட நபர்களின் இனம் அல்லது மதத்தைப் பற்றி குறிப்பிடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்
- நோயால் பாதிக்கப்பட்டவர்களை நோயாளிகளாக அடையாளம் காணவும், நோயின் கேரியர்கள் / டிரான்ஸ்மிட்டர்களாக அல்ல
- வெளியிடப்படும் தகவல்கள் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் இருத்தல் வேண்டும், தவிர வெவ்வேறு நபர்களின் தனிப்பட்ட கருத்துக்களில் அல்ல.
- நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை, காணொளிகள் வெளியிடுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
- இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை மிகவும் அவதானமாக படத்தொகுப்புச் செய்து, மனதை பாதிக்கும் காட்சிகள், தனிமனித அடையாளங்களை வெளிப்படுத்தும் காட்சிகள் போன்றவற்றை நீக்குத்தல் அவசியம்.
- மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் எந்தவித பதிவுகளும் முற்றாக தடை.
- நோயைக் கையாள்வதில் மக்களிடையே ஒத்துழைப்பையும் ஆதரவையும் வளர்ப்பதற்காக COVID-19 குறித்து நேர்மறையான முறையில் பதிவுகள் பகிர்தல் நலம்.