கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு உடல்களை அடக்கம் செய்யலாம் தகனமும் செய்யலாம் என பரிந்துரைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன
நிபுணர்குழுவின் அறிக்கை என தெரிவிக்கப்படும் ஆவணங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளன.
நிபுணர் தனது பரிந்துரையில் முன்னர் தான் பரிந்துரைத்த கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பதில் மிகவும் உறுதியாகயிருப்பதாக தெரிவித்துள்ளது.
அக்காலப்பகுதியில் காணப்பட்ட நிலைமைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்துள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
எனினும் கொரேனா வைரஸ்; தொடர்பான பரிந்துரைகளில் மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிபுணர் குழு உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளதுடன் அதேவேளை குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை 24 மணிநேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும், பிரதேப்பெட்டியில் வைப்பதற்கு முன்னர் இரட்டை அடுக்கும் உடல்பையில் உடல்களை வைக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
உடல்கள் புதைக்கப்பட்ட பின்னர் வைரஸ் பரவும் என்பதற்கான ஆதாரமில்லை எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது