நேற்று, பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், எக்ஸ்டசி வகையிலான 18,000 போதை வில்லைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க ஊடகப்பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.