20 இலட்ச பெறுமதியான ஐஸ் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துருகிரிய போதிராஜ மாவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கிரிபத்கொட பிரதேசத்தில் பாரியளவில் ஐஸ் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் பிரபல வர்த்தகர் ஒருவரின் உதவியாளரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.