T24 Tamil Media
இலங்கை

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் சிலருக்கு கொரோனா – ஊழியர்களின் பதற்றம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் இரண்டு தனியார் ஆடைதொழிற்சாலைகளில் சுமார் 1000 மேற்ப்ட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது.

அவர்களுடன் பணியபற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்ற நிலையில் அவர்கள் தமது அச்சத்தினை தமது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலரும் தொழிலின் நிமித்தம் செல்கின்றனர். இதனால் மாவட்டத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உயர் பதவிநிலை ஊழியர்கள் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதற்கு அமைவாக சம்மந்தப்பட்டவர்களு்ம, சுகாதார துறையினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more