T24 Tamil Media
இலங்கை

கைதான யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரையும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் விடுவித்து நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (8) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இரு தரப்பி விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். வழக்கு தவணையிடப்பட்டது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more