சீனாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட சினொபாம் தடுப்பூசிகளை சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த சந்தர்ப்பத்தில் தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இந்த நன்கொடை திடத்தின் கீழ் இலங்கைக்கு 6 இலட்சம் சினொபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.