பிலியந்தலை காவல்துறை பகுதிக்குட்பட்ட மடபத பகுதியில் வைத்து 3.25 கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடியானது கொழும்பின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் பிரிவினர் நடத்திய விசேட சோதனையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதிப் காவற்துறை
அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பனன் மேலதிக வரிசையில் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது