T24 Tamil Media
இலங்கை

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பொது வாக்கெடுப்பு அவசியம்!

20 ஆவது திருத்தில் ஒருசில உட்பிரிவுகளை சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் எனவும் ஒருசில உட்பிரிவுகளுக்கு பொதுவாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாய கர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அரசமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

20ஆவது திருத்தத்தின் அரசமைப்பின் 82(1)ஆவது பிரிவிற்கு இணங்குவதாகவும், 82(5) பிரிவிற்கமைய சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சபையில் அறிவிக்கப்பட்டு, அதன் 35, 14, 22 ஆகிய பிரிவுகள், அரசமைப்பின் 4 ஆவது பிரியுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 3 ஆவது பிரிவுடன் ஒத்திசையாததன் காரணத்தினால், அரசியலமைப்பின் 83ஆவது பிரிவிற்கமைய, பொது வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்கள் அவை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற வியாக்கியானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதன் 3 மற்றும்14 ஆகிய பிரிவுகளில் காணப்படும் விடயங்களை நாடாளுமன்ற குழுநிலை அமர்வின்போது, மாற்றியமைத்து நீக்கப்பட முடியும் எனவும் 5 ஆவது பிரிவில் காணப்ப டும் விடயத்தை, உயர் நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுக்கு அமைய, அவசியமான விதத்தில் மாற்றியமைத்து நீக்க முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த வியாக்கியாளம், கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்றதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு தாக்கல செய்யப்பட்டுள்ள மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசீலனைகள், கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி நிறைவுக்கு வந்தடைந்திருந்தன.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு பரிந்துரைக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more