கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 21 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமக்கான சேவைகளை மொத்தம் 1,118 பயணிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 455 பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் ஊடக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து வருகை தந்த 98 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து வருகை தந்த 70 பேரும் இவற்றுள் அடங்குவதுடன்
இலங்கை இராணுவத்தினரால் அனைவரும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை 663 பயணிகள் 11 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை விட்டு புறப்பட்டும் உள்ளனர்.
மேலும் இந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 174,532 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 269,874 கிலோ கிராம் எடையுடைய பொருட்கள் விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்ட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.