19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு.
நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று காலை 6மணிக்கு தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மாலை 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டது.
அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது ஏப்ரல்மாதம் 20 திகதி திங்கள் காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் 20ஆம் திகதி காலை 6.00 மணிக்கு பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஜன்னதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே காணப்படும்.
எந்த ஒரு நபரும் குறித்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொது மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களை ஏற்று செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.