பொலனறுவை மாவட்டத்தின் லங்காபுரி பிரதேசத்திற்கு உட்பட்ட 12 கிராமங்கள் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.