மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக் குட்பட்ட ஒல்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 11 தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.