T24 Tamil Media
இலங்கை செய்தி

1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் தொடர்பாக இன்று (08) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படைச் சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இக்கொடுப்னவுடன், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு தொடர்பான இப் பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவு திட்டத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக முன்மொழிவை பிரதமர் மேற்கொண்டார். இதற்கமைய தோட்ட நிர்வாக கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை தொழில் அமைச்சர் நடத்திய போதும் சுமுகமான தீர்வை எட்ட முடியாமல் போனது.

இதனால் அமைச்சரவை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் தேயிலை, இறப்பர் தொடர்பான சம்பள நிர்ணய சபை கூடியது.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தோட்ட நிர்வாக கம்பனிகள் முன்னதாக உடன்பாடு தெரிவித்திருந்த போதும், அதற்காக அவை முன்வைத்த நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more