பாவனைக்கு பயன்படுத்த முடியாத 10 ஆயிரம் தேயிலைத் தூள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் காவற்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த கைது நடவடிக்கையானது யக்கல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இரண்டு லொறிகளில் தூள்களை கொண்டு செல்லும்போதே காவற்துறை அதிரடிப்படையினர் அவற்றை தடுத்தி நிறுத்தி பறிமுதல்செய்ததுடன் லொறியின் சாரதிகள் இருவரையும் காது செய்துள்ளனர் .
அத்துடன் கைதான நபர்கள் இருவரையும் மேலதிக விசாரனைகளுக்காக யக்கல காவல் நிலையத்தில் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாக பிரதிக் காவற்துரைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
மேலும் தண்டனைச்சட்டம் மற்றும் தேயிலை வாரிய சட்ட்தின் கீழ் இது தொடர்பான பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.