காலி பேருந்து தரிப்பிடத்தில், செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில், அதிக சத்தத்துடன் தொடர்ச்சியாக ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின்சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.