திவுலபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஒரு கிலோ 496 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிம்புலாபிடிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்த 22 மற்றும் 42 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறையின் போதைப்பொருள் பணியகம் ஊடாக மேலதிக விசாதணைகள் இடம்பெற்று வருகின்றன.