ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய பெருமளவு மக்கள் நாட்டில் உள்ள நிலையில் தான் தற்போது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார்
அத்துடன் முன்னணி தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார் .
மேலும் ஒரு மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, தான் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையிலேயே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது . .