ஹட்டன் நகரில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதர்கர்களினால் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில், பொதுசுகாதார அதிகாரிகள் இன்றைய தினம் திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போதே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் எவ்வாறு செயற்பட வேண்டும் என வர்த்தகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலானவர்கள் அவற்றை மீறும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது