நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கத்தினால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் வேகமாக பரவக்கூடியஇந்த புதிய கொரோனா வைரஸால் மக்கள் மிகவும் பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்.
ஆகையினால் கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி அவர்கள் தேவையற்ற பயணத்தை மக்கள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமத்திமின்றி மக்கள் அனைவரும் திருமண நிகழ்வுகள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், இரவு விடுதிகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மக்கள், நெரிசலான இடங்களிலிருந்து முடிந்த வரை விலகி இருக்க வேண்டும் எனவும் வைத்தியர் ருவன் விஜேமுனி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இவ்வாறு செயற்படாத பட்சத்தில் கொழும்பு நகரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .