நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையும், தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களையும் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இவ் ஒழுக்கநெறிக் கோவை மற்றும் வழிகாட்டல்கள் தனித்தனியாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான தேர்தல் வேட்புமனு அறிவித்தல் வெளியிடப்பட்ட தினம் முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் காலப்பகுதி வரை இந்த ஒழுக்க நெறிக் கோவை செல்லுபடியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். சுயேச்சை சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் ஒழுக்க நெறிக் கோவை பின்பற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இக்காலப் பகுதியில் ஒவ்வொரு ஊடக நிறுவனங்களும் அரசியல் கருமங்கள் தொடர்பான தமது செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்பு செய்வதில் பக்கச்சார்பற்ற வகையில் நடுநிலைத் தன்மையுடன் தகவல்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.