கொவிட் 19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது மன்னார் மாவட்டச் செயலகத்தில் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் இத் தீர்மானம் எட்டப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இடம் பெறவவுள்ள மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா சுகாதார முறையினை கடைப்பிடித்து எவ்வாறு சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும்,மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மாத்திரம் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட எவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் என்பது தொடர்பிலும்,கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆலய பகுதிகளில் மக்கள் நடந்து கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடி நிறுத்தப்பட்டுள்ளதுடன்திருக்கேதீஸ்வரத்திற்கு வருகின்றவர்கள் சுகாதார நடை முறைகளை உரிய வகையில் பின் பற்றிக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது . .