T24 Tamil Media
இலங்கை

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம்.

இலங்கை உட்பட 210 ற்கு மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கி இலங்கைக்கு திரும்ப முடியாதுள்ள 60 ஆயிரம் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் வெளிநாட்டு தூதரகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்து. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளுக்கிடையிலான அனைத்து மார்க்கங்களிலுமான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குறித்த விசேட செயற்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமையை இதுவரை 59 ஆயிரத்து 419 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களுள் 21 ஆயிரத்து 575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இணைந்து மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான நிவாரணப்பணிகளை வழங்குவதற்கான திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more