யாழ் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியாக தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞன்
வடமராட்சி பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் அடிக்கடி சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய இவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.