இலங்கையில் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களிற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் சதொச நிறுவனங்களில் இருந்து வீடுகளுக்கு பொருட்களை தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தின் ஆரம்பமாக ஹோமாகம, ஹெவ்லோக் டவுன், கடவத்தை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
ஆரம்பகட்ட செயற்றிட்டம் வெற்றியளிக்குமாக இருந்தால் இதனை ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.