யாழ் மாவட்ட விவசாய உற்பத்திகளை வெளிமாவட்டங்களிற்கு விநியோகிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கு மாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா. குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா. குகதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 50% மக்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர் என்றும்
கடந்த மார்கழி மாதம் உருவாக்கிய புதிய மரக்கறிப் பயிர்கள் வளர்ந்து அறுவடை தருவது பங்குனி,சித்திரை,வைகாசி,ஆனி மாதங்களில் தான் ஆனால் கொவிட் 19 காரணமாக உற்பத்தி விளைவுகள் அதிகம் கிடைக்கும் நேரத்தில் சந்தை வாய்ப்புக்கள் இன்றி மூதலிடுகளையும் இழந்து அவல நிலைக்குள் விவசாயிகளின் குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றனர் என்றும்
பல இடங்களில் மூட்டை மூட்டையாக மரக்கறிகள் பழுதடைந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானிக்க முடிகின்றது.
வெளிமாவட்ட சந்தை வாய்ப்புக்கள் இல்லாமையால் விவசாயிகள் வருமானத்தை பெறுகின்ற நேரத்தில் தங்களது சொந்த முதல்களையே இழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.
ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான பாதுகாப்பான ஒழுங்குகளை உடனடியாக விரைந்து ஐனாதிபதி எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.