கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தங்கமானது கழிப்பறையில் கைவிடப்பட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கழிப்பறையில் காணப்பட்ட 3 பார்சல்களை சோதனையிட்ட போது அவற்றுள் பெருந்தொகை தங்கம் இருந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்கம் 1.3 கோடி ரூபாய் பெறுமதியாதென மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தங்கத்துடன் தொடர்புடைய உரிமையாளரைத் தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.