மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் விசேடமகா பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய குறித்த அனுமதி கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த யோசனைக்கு அமைய அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முறையான பொறிமுறைகளை பின்பற்றி குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.