T24 Tamil Media
இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கும் பாரம்பரிய வைபவம் இன்று (01) நடைபெற்றது.

முல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் கடற்கரைக்கான பாதயாத்திரை இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்தனர்.

பரை மேள வாத்தியங்கள் முழங்க பண்பாட்டு ரீதியான யாத்திரைப் பயணம் ஆரம்பமானது.

கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் வழமையாக அதிகளவிலானவர்கள் பங்கேற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே இம்முறை சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து கடலுக்கு செல்லும் வீதியில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

10 கிலோமீற்றர் தூர பயணத்தின் பின்னர் கடற்கரை அடைந்த பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தம் எடுத்து வந்தனர்

இந்தத் தீர்த்தம் காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விளக்கேற்றப்படவுள்ளது.

ஒரு வாரம் கடல்நீர் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டு அடுத்த வாரம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது​.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more