மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் திருவுடல் மன்னார் மறைமாவட்த்திற்கு இன்றைய தினம் பவனியாக கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில் மன்னார் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் பெரிய வெள்ளி தினமான இன்று வைக்கப்படுகின்ற அவரது திருவுடலுக்கு பொது மக்கள் பிற்பகல் 2 மணிமுதல் இறுதி அஞ்சலியை செலுத்த முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
அத்துடன் இவர் நீண்டகாலமாக சுகயீனமுற்று யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி, வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, தமது 80வது வயதில் நேற்றையதினம் காலமானார்.
மேலும் யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடலுக்கு நேற்று பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.