நாட்டில் தற்போது கொவிட் 19 தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்ற நிலையில் வடமாகாணத்தில் நேற்றைய தினத்தில் மேலும் 129 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த தகவலினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 1003 மாதிரிகளின் பரிசோதனை முடிவிலேயே 129 பேருக்கு தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களுள் நல்லூர், பாற்பண்ணை கிராமத்தை சேர்ந்த 88 பேரும், யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 26 பேரும், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் 3 பேரும் அடங்குவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.