T24 Tamil Media
இலங்கை

வடமராட்சி குண்டுவெடிப்பு – சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்.

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் தமது பாதுகாப்பின் கீழ் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது 28) என்பவரையே விசாரணைக்காக கைது செய்வதற்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு தேடி வந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த நிலையில், சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் கடந்த 27ஆம் திகதி குறித்த கிளைமோர் குண்டுத்தாக்குதல் காவல்துறையினரை இலக்கு வைத்து சம்பவம் இடம்பெற்றது.

சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் அன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்திறங்கியபோது நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே காவல்துறையினர் இருவர் காயமடைந்தனர்.

சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிஸாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.

இந்நிலையிலையே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more