T24 Tamil Media
இலங்கை

வடக்கு மாகாணத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?


வடக்கு மாகாணத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்ஸிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலையில் அதனால் அதிகரித்த விலையும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகுவது தவிர்க்கமுடியாததாகும். அரிசி விநியோகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஐந்து அல்லது ஆறு வாரங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிறையவே உண்டு.

எனவே மேலதிக நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளூரில் இருக்கக்கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். சாதாரணமாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் நெல் இம்மாகாண மக்களின் அரிசித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யக்கூடியது என்பது எல்லோராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உற்பத்தியாகும் நெல் தனியார் துறையினரால் கொள்வனவு செய்யப்பட்டு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதால் பல சந்தர்ப்பங்களில் அரிசித் தட்டுப்பாடு எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது.

வழமையாக குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யும் தனியார் துறையினர் தற்போது கூடிய விலை கொடுத்து கொள்வனவு செய்யக்கூடிய சாத்தியம் யதார்த்தமானது. அரிசி விநியோகத்தைப் பொறுத்தவரை இன்னும் ஐந்து அல்லது ஆறுவாரங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிறையவே உண்டு.


எனவே வடமாகாணத்தின் ஐந்து மாவட்டமெதிலுமிருந்தும் வடமாகாணத்திற்கு வெளியே நெல் கொண்டு செல்வதைத் தடைசெய்தல் மிக கட்டாயமானதாகவே தோன்றுகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெளியே நெல் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது போல வட மாகாணத்திலும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும் எனக் கோரப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more