இலங்கையில் கொரோனா பரவும் அபாயத்தையடுத்து நாடளாவிய ரீதியில் காவற்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் அனைத்து மக்களும் வீட்டிலிருந்து அமைதியாக சார்வரி புத்தாண்டை வரவேற்றனர்.
வட, கிழக்கு மாகாணங்களிலும் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி மக்கள் புத்தாண்டை வரவேற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.