கொழும்பிலிருந்து லொறி மூலம் சட்டவிரோதமாக தப்பிவந்த எட்டு பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு வருகைதந்த எட்டு பேரும் கண்டறியப்பட்டு தத்தம் வீடுகளில் தனிமைப்பட்டிருந்தனர்.
சற்றுமுன்னர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றி வந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தற்பளை இராணுவ முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.காவற்துறையினர் தாக்கல் செய்த மனுவிற்கமைய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் இவ்உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அவர்களை எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதிவரை விடத்தற்பளை இராணுவ முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு -12 பகுதியிலிருந்து 8 பேர் பாரவூர்தியில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தனர்.
அவர் 8 பேரும் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை ஏற்றி வந்த சாரதியும் கண்டறியப்பட்டார்.
குருநகர், ஐந்துசந்தி – ஒஸ்மானியா வீதி, சங்கானை – ஓடக்கரை சுழிபுரம் – தொல்புரம், தௌ;ளிப்பளை, நாவற்குழி ஆகிய பகுதிகளை சார்ந்த ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்