வெற்றிடமாக காணப்படும் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நிரப்ப ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலின் அடுத்த இடத்தில் அஜித் மான்னப்பெரும உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த பாராளுமன்ற தேர்தலில் 47, 212 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு அஜித் மான்னப்பெரும பதிலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.