இராணுவ வீரர் ஒருவர் நான்கு கோழிகளை திருடிய குற்றச்சாட்டில் நேற்றையதினம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் போத்தல பகுதியைச் சேர்ந்த அண்டுரட்வில பகுதியில் வசிக்கின்ற இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் .
அத்துடன் 2,500 ரூபாய் மதிப்புள்ள நான்கு கோழிகளை திருடியதாக போத்தலவின் வல்பிட்ட பகுதியில் வசிப்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஏன்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் காலி நீதிமன்றில்முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .