விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சந்தேகத்திற்குரியவர்களை இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறி விநியோகத்தில் 15 பில்லியன் ரூபாவை முறையற்ற வகையில் கையகப்படுத்திய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.