வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாத முதல் வாரத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்பதவியை பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தலைவரிடம் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், கட்சியின் தலைவர் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை என அறிய முடிகின்றது.
அத்துடன் அவர் தனது தீர்மானத்தை இந்த மாத இறுதிக்குள் அவர் தெரிவிப்பார் என கூறப்படுகின்றது.