T24 Tamil Media
இலங்கை

ரணிலுக்கே ஆதரவு – உறுப்பினர்கள் உறுதிபட தெரிவிப்பு.

கொழும்பு மாநகர சபைக்கு யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள 60 உறுப்பினர்களில் 58 பேர் பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் விசேட சந்திப்பொன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பிலே இவ்வாறு உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

இதன்போது மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கூட்டணிக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளிக்க கூடாது என்ற பிரேரணை ஒன்றை மாநகர சபை உறுப்பினர் டைடஸ் பெரேராவினால் முன்மொழியப்பட்டு, பிரதி மேயர் மொஹமட் இக்பாலினால் வழிமொழியப்பட்டுள்ளது.

மேலும் கட்சி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து சமுகமளிக்காமல் இருப்பவர்கள் மற்றும் ஆதரவளிக்காமல் இருக்கும் மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சட்டப்பிரிவுடன் கலந்துரையாடி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more