வடமாகாணத்தில் முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது யாழ் மாவட்டத்துக்கு இரண்டு ரெக் பந்தாட்ட மேசை வழங்கப்படுள்ளதுடன் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மேலும் யாழ்மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பங்கேற்றியதுடன் இந்த நிகழ்வில் வடமாகாண விளையாட்டு கழகங்களுக்கு 15 லட்சம் ரூபாய் பெறுமதியான ரெக் பந்தாட்ட உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.