T24 Tamil Media
இலங்கை

யாழ். மாவட்ட விவசாயிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் – சுரேந்திரன் அவசர கடிதம்.


யாழ். மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட செயலாளருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கு இது தொடர்பில் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில…..

யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் உள்ளிட்ட உற்பத்திகளில் யாழ். மாவட்டத்தின் நுகர்ச்சிக்கு மேலதிகமானவற்றை யாழ். மாவட்டத்திற்கு வெளியே எடுத்துச்சென்று விற்பனைசெய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும்


கொரோனாவின் தாக்கத்தினால் முடங்கியுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் உள்ளிட்ட பலர் மக்களை உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்குமாறும் அனைவரையும் தங்களது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை மேற்கொள்ளுமாறும் ஊக்கப்படுத்தி வருகின்றோம்.


இந்நிலையில் உள்ளூர் விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் அவதியுறுவதுடன் யாழ் மாவட்ட மக்களின் நுகர்ச்சிக்கு மேலதிகமான உற்பத்திகளை வடக்கின் ஏனைய பகுதிகளுக்கோ அல்லது தென்பகுதிக்கோ எடுத்துச்செல்ல முடியாமல் மரக்கறி வகைகள் கால்நடைகளுக்கு போடப்படுவதுடன் தினமும் பெருந்தொகையான உற்பத்திகள் பழுதடைந்து விரயமாகி வருகின்றது.


யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ளமையினால் உள்ளூர் சந்தைகள் செயலிழந்துள்ள நிலையில் மாவட்டத்திற்கு வெளியே எடுத்து செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒருசிலருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அவர்கள் ஒருசில இடங்களில் அதுவும் குறைந்த விலையில் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் இவர்களால் கொள்வனவு செய்யப்படாத உற்பத்திகள் அழுகி நாசமாகி வருகின்றது.

எனவே மாவட்ட செயலாளர் இவற்றை கருத்திற்கொண்டு விவசாய உற்பத்திகளை மாவட்டத்திற்கு வெளியே எடுத்து செல்வதற்கான அனுமதியினை மேலும் சிலருக்கு வழங்கி உற்பத்திகளை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க ஆவனசெய்யும் அதேவேளை உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி செயற்படுத்தவும் முன்வரவேண்டும்.


இவைகள் சாத்தியப்படாதவிடத்து சந்தைப்படுத்தல் வசதிகளின்றி நஷடமடையும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அவர்களின் வறுமையை போக்கவேண்டும்.


தற்போது இவற்றை நாம் நடைமுறைப்படுத்த தவறின் விவசாயிகள் விரக்தியுற்று தமது விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர்.


இதனால் நாம் அனைவரும் வலியுறுத்திவரும் தற்சார்பு பொருளாதாரக் கோட்பாடு வலுவற்றுப்போய் எமது உணவிற்காக நாம் வேறு யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயநிலை ஏற்படலாம்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more