T24 Tamil Media
இலங்கை

யாழ். மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை

யாழ்.மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மீள இயக்கமுடியுமென யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உப தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் ஆராயப்பட்டு வர்த்தகர்களுக்கு அறிவித்தல் வழஙகப்பட்டதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்துத் தொழிற்சாலைகளும் அச்சுவேலி தொழிற்பேட்டை உட்பட அனைத்து வகையான தொழிற்சாலைகளையும் இயக்குவதற்கு எத்தகைய தடையும் இல்லை.

இவர்கள் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொழிற்சாலைகளை மீள இயக்கமுடியும்.

தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் தடங்கல் ஏற்படுமாயின் யாழ்ப்பாண வணிகர் கழகத்திடமோ அல்லது அரசாங்க அதிபரிடமோ தொடர்புகளை மேற்கொண்டால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரம் முதற்கொண்டு அனைத்துவிதமான தடைகளையும் நிவர்த்திசெய்து கொள்ளமுடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more