T24 Tamil Media
இலங்கை

யாழ் பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று.

யாழ் பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களில் 500 பேருமாக, மொத்தமாக 2 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்றும் நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்துடன் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 100 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து தடுப்பூசி வழங்கட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குண ராஜா தடுப்பூசி ஏற்றி ஆரம்பித்து வைக்க அனைத்து பல்கலைக்கழகப் பணியாளர்களும் தாமாக முன்வந்து தமக்குரிய தடுப்பூசிகளின் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாட்டினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more